UGC NET 2021 தேர்வுகள்
ஒத்திவைப்பு – மத்திய கல்வி
அமைச்சர்
ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை
(NTA) சார்பில், பல்வேறு
உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்
தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக இந்த தேர்வுகள்
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்காகவும், முனைவர்
பட்ட ஆய்வு மாணவராகப்
பதிவு செய்வதற்கான தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித்தேர்வாகவும் நடத்தப்படுகிறது.
கடந்த
ஆண்டு கொரோனா காரணமாக
இந்த தேர்வுகள் 2 முறை
ஒத்திவைக்கப்பட்ட நவம்பர்
மாதத்தில் நடத்தப்பட்டது. தற்போது
கொரோனா இரண்டாம் அலை
தாக்கம் காரணமாக ஜேஇஇ,
முதுநிலை நீட் போன்ற
தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து
தற்போது கல்லூரிகளில் உதவி
பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்படும் நெட்
(NET) தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே
2 ஆம் தேதி UGC NET தேர்வுகள்
நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மத்திய அமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த
தேர்வுகளுக்கு மறு
தேதி தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக புதிய
தேதி வெளியிடப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.