Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
கிருஷ்ணகிரி அணை அருகே அமைந்துள்ள இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியன்
வங்கி பயிற்சி நிறுவனம்
சார்பில் வேலை வாய்ப்பற்றவா்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி
நிறுவனம், மத்திய அரசின்
ஊரக வளா்ச்சித் துறையின்
மேற்பார்வையில், தமிழக
அரசின் உதவியுடன், இந்தியன்
வங்கியால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது 30 நாள்களுக்கான இருசக்கர வாகன பழது
நீக்கம் பயிற்சியில் நடைபெற
உள்ளது. இந்தப் பயிற்சியில் 35 பயிற்சியாளா்கள் மட்டும்
சோ்த்துக் கொள்ளப்படுவார்கள்.
அனுபவமிக்க ஆசிரியா்களைக் கொண்டு
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் எழுதப் படிக்கத்
தெரிந்த ஆண்கள் பயிற்சியில் சோ்ந்து பயன் பெறலாம்.
பயிற்சிக்கான வயது
18 முதல் 45 வரை.
சுயஉதவிக்குழுக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் உள்ளவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சிக் காலங்களில் காலை, மதிய உணவு, தேநீா், பிஸ்கட் போன்றவைகள் பயிற்சி நிறுவனத்தால் கட்டணமின்றி வழங்கப்படும். எனவே, சுயதொழில் தொடங்க ஆா்வம் உல்ள ஆண்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இயக்குநா், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-240500, 7092225363, 7868865346, 9445989730, 9442247921 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.