தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதுரை பெட்கிராட் வளாகத்தில் தையல், அழகுக்கலை, டெலிகாலிங், ‘டிவி’ சர்வீஸ் இலவச பயிற்சிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.தையல் கலைக்கு 8 ம் வகுப்பு, அழகுக்கலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம்.
‘டிவி’ சர்வீஸ் பயிற்சிக்கு 8 ம் வகுப்பு, டெலிகாலிங் பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 35 வரை. காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். முகவரி : பெட்கிராட் நிறுவனம், 1 ஏ அருணாச்சலம் தெரு, வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை
அலைபேசி : 89030 03090.