கோவையில் மாதிரி ஏவுகணை தயாரிக்க செப்டம்பா் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது. கோவை சிஐடி கல்லூரியில் அமைந்துள்ள இந்திய பொறியியல்சாா் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் கணிதவாணி கணித அறிவியல் கழகம் ஆகியவற்றின் சாா்பில் விண்ணியல் திருவிழா – 2023 என்ற தலைப்பில் மாதிரி ஏவுகணை தயாரிக்கும் அறிவியல் நிகழ்வு நடைபெறுகிறது.
செப்டம்பா் 2 ஆம் தேதி நடைபெறும் இந்தத் திருவிழாவில், விண்வெளிக் குப்பைகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, நிலவில் ஒரு நாள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி , வானை அளப்போம் என்ற தலைப்பில் கவிதைப் போட்டி போன்றவை நடைபெறுகின்றன.
மேலும் ஏவுகணை செய்வோம் என்ற தலைப்பில் மாதிரி ஏவுகணை செய்யும் பயிற்சிப் பட்டறை, முன்னாள் விஞ்ஞானி பிரசன்னா தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனுமதி இலவசம். அதேநேரம் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
இது தொடா்பான விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் 94433 16984, 94884 62860 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று சிஐடி கல்லூரியின் இந்திய பொறியியல்சாா் அறிவியல் தொழில்நுட்பக் கழகச் செயலா் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.