சணல் நார்
பை தயாரிக்க பயிற்சி
நாமக்கல்
இந்தியன் வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், ஆண்,
பெண் இருபாலருக்கான சணல்நார்
பை மற்றும் சணல்நார்
பொருட்கள் தயாரித்தல் தொடர்பான
பயிற்சி இலவசமாக அளிக்கபட
இருக்கிறது.
மார்ச்
25ல் துவங்கி, 13 நாட்கள்
நடக்கிறது.
இதுகுறித்து பயிற்சி
நிறுவன இயக்குனர் பிருந்தா
வெளியிட்ட அறிக்கை: பயிற்சிக்கு, 33 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆகையால்
முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்களை, இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், ரவின் பிளாசா,
திருச்சி சாலை, ரயில்வே
மேம்பாலம் அருகில், நாமக்கல்
என்ற முகவரியில், மார்ச்
23ம் தேதிக்குள், நேரில்
வந்து பூர்த்தி செய்து
தரவேண்டும்.
விண்ணப்பதாரர் குறைந்த பட்சம், 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 வயதுக்கு மேல்,
45 வயதுக்குள் இருக்கவேண்டும், பயிற்சிக்கான செலவு, பயிற்சிக்கான பொருட்கள்,
உணவு அனைத்தும் இலவசமாக
வழங்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு 04286 221004 என்ற
தொலைபேசி எண்ணிலும், 96989 96424,
88259 08170, 84892 79126 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.