TAMIL MIXER EDUCATION.ன்
தொழில் செய்திகள்
மாணவர்களை தொழில்
முனைவோராக்க, பயிற்சி
பள்ளி
புத்தாக்க மேம்பாட்டு திட்டம்
மூலம், அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும்,
ஒன்பது முதல் பிளஸ்
2 வரையிலான மாணவர்களை, தொழில்
முனைவோராக்க, பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, தமிழ்நாடு
தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனமான
யுனிசெப் அறிவுசாரா நிறுவனம்
சார்பில், அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகளில், புத்தாக்க
மேம்பாட்டு திட்டம் கொண்டு
வரப்படவுள்ளது.
திட்டத்தை
விரைவில் செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கின்றன. மாணவர்களை குழுவாக
பிரித்து, போதுமான பயிற்சி
வழங்கிய பின், அவர்களின்
செயல்திட்டங்கள், புதிய
ஆய்வுகள், கண்டுபடிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.இதை
பிரத்யேக குழு மதிப்பீடு
செய்து, சிறந்த செயல்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கி,
தொழில் முனைவோராக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான
முதற்கட்ட பயிற்சி,
வரும்
செப்., 22, 23ம்
தேதிகளில், மாநில அளவில்
நடக்கிறது. பள்ளி வாரியாக,
இத்திட்டத்திற்கு அறிவியல்
பாடம் கையாளும், ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாணவர்களுக்கு சிறப்பு
பயிற்சி வழங்கப்படும். திறமையான
மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow