மதுரை புதுார் தொழிற்பேட்டை மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் இளைஞர்களுக்கான ‘ஆன்லைன் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்’ அமைப்பது குறித்த பயிற்சி செப்.,24 முதல் 26 வரை நடக்கிறது.
கட்டணம் ரூ.2950. இப்பயிற்சியில் எலக்ட்ரிக் வாகனம், கார் தொழில்நுட்பம், சார்ஜிங் ஸ்டேஷன் மாதிரி, செயல்திட்டம், அரசின் சட்டம் குறித்து விளக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் சுயதொழில் செய்ய விரும்பினால் வங்கி கடனுதவி பெற வழிகாட்டப்படும். தொடர்புக்கு: 86956 46417.