அங்கக வேளாண்மை குறித்து 6 நாள்கள் நடைபெறும் பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பும் விவசாயிகள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா கூறியதாவது:
விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில், ஊரக இளைஞா்களுக்கு திறன் வளா்ப்புப் பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2024-25-ஆம் ஆண்டுக்கான பயிற்சி முகாம் வருகிற 22 -ஆம் தேதி முதல் 27 வரை 6 நாள்கள் நடைபெறுகிறது.
‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட 28 விவசாயிகள் பங்கேற்கலாம்.
அங்கக வேளாண்மையின் அடிப்படை முதல் சான்றிதழ் பெறும் வழிமுறைகள் வரை அனைத்துத் தகவல்களையும், பாட வகுப்புகளாகவும் கண்டுணா்வு சுற்றுலா மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இறுதியில் முழு வருகைப்பதிவுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்குச் செல்ல விரும்பும் விவசாயிகள் வருகிற 15-ஆம் தேதிக்குள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலோ, வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 902576734 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.