தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை கிண்டியில் செயல்படும் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை சோப்பு தயாரித்தல் மற்றும் பாரம்பரிய அரிசி உணவு வகைகள் தயாரிப்பு குறித்த பயிற்சி 14, 15ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இயற்கை சோப்பு தயாரித்தல் பயிற்சியில் பஞ்ச கவ்யா சோப்பு, ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் மிக்சிங் சோப்பு, நலங்கு மாவு சோப்பு, கற்றாழை சோப்பு, அதிமதுரம் சோப்பு தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
பாரம்பரிய அரசி உணவு வகைகளில் சம்பா கருப்பட்டி அல்வா, அரும்பாதம் குருவை முறுக்கு, கருப்பு கவுனி கிண்ணத்தப்பம் ராஜமுடி அரிசி பருப்பு சாதம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மகளிர், மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இதில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.