தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, மூலிகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியை 10.12.2024 முதல் 12.12.2024 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.
தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு, முடி வளர்ச்சி எண்ணெய், முடி வளர்ச்சி ஷாம்பு, முகம் கழுவும் ஜெல், கை கழுவும் திரவம் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்குமிடம் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு, அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பின்வரும் முகவரி மற்றும் தொலைபேசி / மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுதாங்கல், சென்னை 8668102600/7010143022.