பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிபுரியும் வல்லுநா்கள் ஆகியோரிடையே ஆக்கபூா்வமான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்’ பயிற்சியில் சேருவதற்கு ஆக.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடியின் ப்வா்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் கணிதத் திறனை மேம்படுத்தவும், அவா்கள் எந்தவொரு விஷயத்தையும் பரந்து சிந்தித்து அணுக ( அவுட் ஆப் பாக்ஸ் ) உதவும் வகையிலும் இணைய வழியிலான பயிற்சித் திட்டத்தை சென்னை ஐஐடி செயல்படுத்தி வருகிறது.
இந்த பயிற்சிக்கான பாடநெறி அனைவருக்கும் இலவசமாக இணையவழியில் கிடைக்கப்பெறும். ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ 4 நிலைகளைக் கொண்ட 10 வாரகால பாடத்திட்டத்தைக் கொண்டது.
குறிப்பிட்ட கால அளவில் அசைன்மெண்ட் மற்றும் தீா்வுகள் போன்றவையும் இடம்பெறும். இது 10 லட்சம் பள்ளி-கல்லூரி மாணவா்கள் தவிர பணிபுரியும் வல்லுநா்கள், ஆராய்ச்சியாளா்கள் ஆகியோரையும் சென்றடைய சென்னை ஐஐடி ப்ரவா்த்தக் திட்டமிட்டுள்ளது.
இதில் சேர விரும்புவோா் முகவரியில் ஆக.10-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
மேலும், பாடத் திட்டம் மற்றும் பல்வேறு நிலைகளுக்கான தகுதி பற்றிய கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் .காமகோடி கூறியது: கணிதத்தில் ‘அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்’ சிந்தனையைப் பயன்படுத்துவதால் படைப்பாற்றல் வளரச் செய்கிறது.
அத்துடன் நிலையான சூத்திரங்கள், வழிமுறைகள் ஆகியவற்றுக்கு அப்பால் சிந்திக்க ஊக்குவித்து, புதிய அணுகுமுறைகள், தனித்துவமான தீா்வுகளுக்கு வழிவகுக்கிறது என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow