‘வரும், 21ல், நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 21 காலை, 10:00 மணிக்கு, ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
பயிற்சியில், மீன் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரி-சோதனை, பண்ணைக்குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசு-களின் பல்வேறு மானிய திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது.
மேலும், இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு, இந்தாண்டிற்-கான மீன் குஞ்சுகள் இடுபொருட்கள் வழங்குவதில், நாமக்கல் மாவட்ட மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை தரப்-படும். வேலையில்லா பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தர-சிகள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையா-ளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலை கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286–266345, 266650, 7358594841 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.