சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் 100 பேருக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் நிச்சயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதனையடுத்து அவர்கள் தங்களது ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, செமஸ்டர் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல், புகைப்படம் ஆகியவற்றுடன் நமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் 044-25246344, 944502956 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.