தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருள்கள், மிட்டாய்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இப்பயிற்சியில், ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சா்க்கரை மிட்டாய் வகைகள் ஆகியவை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் பயிற்சியின் முதல் நாளன்று ரூ. 1,770 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow