TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சி – திருவள்ளூா்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் தகுதியான திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்பு மற்றும் பணியாற்றும் திட்டம் மூலம் நகா்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு திறன் வளா்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, இத்திட்டம் மூலம் திறன் வளா்ப்பு பயற்சிகள் 2022-2023 ஆண்டுக்கு திருவள்ளுா் மாவட்டத்தில் நடத்துவதற்கு உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம். இதற்கு திறன் வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளா்ப்பு நிறுவனத்தில் கட்டாயம் பதிவு செய்திருப்பது அவசியம்.
இதில், பிரதமா் கௌசல் கேந்திரா பயிற்சி மையங்களைக் கொண்ட திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த விதிமுறைகளின்படி, அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளா்ப்புப் பயிற்சிகள் மற்றும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு, பயிற்சி முடித்தமைக்கான முன் அனுபவம் இருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
எனவே தகுதியான திறன் வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்கள், தங்களது கருத்துருக்களை திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் வரும் 30க்குள் சமா்ப்பித்து பயன்பெறலாம்.