வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி – கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேற்படி, பயிற்சியை பெற விரும்புகிறவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். இது குறித்து மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள மண்டல துணை இயக்குனர், ஜவுளித்துறை, எண் 502, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் – 641604 என்ற முகவரியிலும், rddtextilestpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 0421–2220095 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow