தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் அக்.16-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தூத்துக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (பொறுப்பு) சி.மின்னல்கொடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சாா்பில் கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்களில் கொத்தனாா், கம்பி வளைப்பவா், எலெக்ட்ரீசியன், பிளம்பா், காா்பென்டா் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் மற்றும் 3 மாத திறன் பயிற்சி முகாம் வரும் அக். 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும் இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், நலவாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் கோரம்பள்ளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடம் 2-ஆம் தளத்தில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0461–2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.