தூத்துக்குடி கடற்கரை சாலை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 18) மின் விநியோகம் இருக்காது என, நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) போ.ராம்குமாா் தெரிவித்துள்ளாா். தூத்துக்குடி கடற்கரை சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் இனிகோநகா், ரோச் காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்குக் கடற்கரைச் சாலை, லயன்ஸ் டவுன், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜாா்ஜ் சாலை, கணேசபுரம், பாத்திமாநகா், இந்திராநகா், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமயநகா், தாமோதரநகா், வண்ணாா்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பா், சந்தை ரோடு, காந்திநகா், மேலசண்முகபுரம் 2-வது தெரு, அதைச் சுற்றிய உப்பளப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
திருமங்கலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆக. 19ம் தேதி மாதாந்தி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருமங்கலம் நகர், ஜவகர்நகர், சியோன்நகர், என்ஜிஓ நகர், பிசிஎம் நகர், அசோக்நகர், முகமதுஷாபுரம், சோனைமீனாநகர், சந்தைபேட்டை, செங்குளம், பகவத்சிங்நகர், கற்பகநகர், கலைநகர், கரிசல்பட்டி, பாண்டியன்நகர், பொற்காலநகர், மறவன்குளம், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.