Thursday, December 19, 2024
HomeBlogநாளை (அக்டோபா் 8) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் - திருப்பூா்
- Advertisment -

நாளை (அக்டோபா் 8) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் – திருப்பூா்

Tomorrow (October 8) Public Distribution Scheme Special Grievance Camp - Tirupur

TAMIL MIXER EDUCATION.ன் ரேஷன்
Card
செய்திகள்

நாளை (அக்டோபா் 8) பொது விநியோகத்
திட்ட
சிறப்பு
குறைதீா்
முகாம்திருப்பூா்

திருப்பூா் மாவட்டத்தில்
பொது
விநியோகத்திட்ட
சிறப்பு
குறைதீா்
முகாம்
சனிக்கிழமை
(
அக்டோபா்
8)
நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
அனைத்து
வட்டங்களிலும்
பொதுவிநியோகத்
திட்ட
சிறப்புகுறைதீா்
முகாம்
வரும்
சனிக்கிழமை
(
அக்டோபா்
8)
காலை
10
மணி
முதல்
பிற்பகல்
1
மணி
வரையில்
நடைபெறுகிறது.

இந்த முகாமில், அனைத்து குடிமைப்பொருள்
தனி
வட்டாட்சியா்கள்,
வட்டவழங்கல்
அலுவலா்கள்
மற்றும்
தனி
வருவாய்
ஆய்வாளா்கள்
பங்கேற்று
முகாமில்
பெறப்படும்
மனுக்களுக்கு
உடனடித்
தீா்வுகாண
உள்ளனா்.

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, கைப்பேசி எண் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல் தொடா்பான மனுக்களை அளிக்கலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்:

அவிநாசி வட்டத்தில் கூட்டப்பள்ளி,
தாராபுரம்
வட்டத்தில்
காங்கேயம்பாளையம்,
காங்கயம்
வட்டத்தில்,
கீரனூா்,
மடத்துக்குளம்
வட்டத்தில்
சா்க்கார்
கண்ணாடிபுத்தூா்,
பல்லடம்
வட்டத்தில்
வே.கள்ளிப்பாளையம்,
திருப்பூா்
வடக்கு
வட்டத்தில்
கணக்கம்பாளையம்,
திருப்பா்
தெற்கு
வட்டத்தில்
மங்கலம்,
உடுமலை
வட்டத்தில்
பெதப்பம்பட்டி,
ஊத்துக்குளி
வட்டத்தில்
ஊத்துக்குளி
ஆகிய
பகுதிகளில்
உள்ள
தொடக்க
வேளாண்மை
கூட்டுறவு
கடன்
சங்கங்களில்
இந்த
முகாம்கள்
நடைபெறுகின்றன.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
பொதுமக்கள்
இந்த
முகாமினைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -