மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை (பிப்.15) நிறைவடைகிறது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை (பிப்.15) நிறைவடைகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஜன. 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
10 சதவீதத்துக்கும் அதிகமானோா் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியிருந்ததால், பிப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பதற்கு புதன்கிழமை (பிப்.15) கடைசி நாள். மேலும், கால அவகாசம் நீடிக்கப்படுமா என்பது குறித்த அதிகாரபூா்வ தகவல் புதன்கிழமை தெரியவரும் . இந்த நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.