நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
திருப்புத்துாரில் நாளை மாற்றுத்
திறனாளிகளுக்கான சிறப்பு
முகாம் நடைபெறுகிறது.
அழகப்பா
பாக்கியம் மண்டபத்தில் நாளை
காலை 10.00 மணிக்கு முகாம்
துவங்குகிறது. தேவகோட்டை
ஆர்.டி.ஓ.,
பிரபாகரன் தலைமை வகிக்கிறார். தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்கள்
குடும்பத்தினருடன் பங்கேற்க
வேண்டும்.
புதிதாக
அடையாள அட்டை வேண்டுவோர் ஆதார், போட்டோ, ரேசன்கார்டு போன்ற ஆவணங்களுடனும், உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்போர் அதற்கான தேவையான வங்கி
புத்தகம் உள்ளிட்ட கூடுதல்
ஆவணங்களுடன் வரலாம்.