தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 150கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் மாதாவரத்தில் உள்ள ஜெய் கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட கல்வி தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம்.
அதனைப்போலவே செப்டம்பர் 16ஆம் தேதி ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நிறுவனங்கள் என்ற லிங்கை கிளிக் செய்த விண்ணப்பிக்கலாம் எனவும் வேலை தேடும் இளைஞர்கள் என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாம் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள வருபவர்கள் அனைவரும் தங்களுடைய சுயவிவர ஆவணங்களுடன் கல்வி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.