HomeBlog8 AM Headlines: (16.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்
- Advertisment -

8 AM Headlines: (16.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

8 AM Headlines: (16.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

தமிழ்நாடு:

  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது – 1.06 கோடி மகளிருக்கு ரூ.1,000 தொகை அனுப்பப்பட்டது.
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழாவில் என்னில் பாதி என் மனைவி துர்கா.. தாய் தயாளு, மகள் செந்தாமரை குறித்து நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்
  • புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு – நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
  • தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினரால் அண்ணா பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம் – காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
  • சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று (செப்.16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம்
  • இன்று தமிழகத்தில் (16.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut) – முழு விவரம்

இந்தியா:

  • கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்கான ‘விஸ்வகர்மா’ திட்டம் – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
  • கருத்து சுதந்திரம் பற்றி நீதிமன்ற அறையில் வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
  • தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர கர்நாடகா அரசு மறுப்பு – செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
  • கொரோனாவை விட ‘நிபா’ வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்
  • சந்திரயான் – 3 வினாடி வினா போட்டி (ரூ. 1 லட்சம் பரிசு) – முழு விவரம்

உலகம்:

  • அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் – இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அதிர்ச்சி தகவல்
  • 5வது மக்கள்தொகை உச்சி மாநாட்டில் ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து
  • மசாக்ரே ஆறு பிரச்சினையால் ஹைதி உடனான எல்லைகளை டொமினிக் குடியரசு மூடியது
  • வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 778 ஆக உயர்வு

விளையாட்டு:

  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா – மொராக்கோ அணிகள் இன்று மோதல்
  • உலகக்கோப்பை இன்றும், நாளையும் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு – ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்படுகிறது
  • நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி – தொடரையும் கைப்பற்றியது
  • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள் (17-09-2023)

Job Details Link
BDL நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இன்ஜினியர் வேலைவாய்ப்பு Apply Here
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! Apply Here
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தில் ப்ராஜெக்ட் லீடர்ஸ், மேனேஜர் வேலைவாய்ப்பு Apply Here
TNUSRB – 3359 காலிப்பணியிடங்கள் Apply Here
ஜிப்மர் நிறுவனத்தில் டெக்னீசியன், நர்ஸ் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,000/- Apply Here
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -