Sunday, December 22, 2024
HomeBlogதமிழ்நாடு காவல்துறை பற்றி #TNUSRB SI Departmental exam
- Advertisment -

தமிழ்நாடு காவல்துறை பற்றி #TNUSRB SI Departmental exam

police Tamil Mixer Education

தமிழ்நாடு காவல்துறை பற்றி #TNUSRB SI Departmental exam

  • தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
  • தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
  • தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 .கி.மீ.
  • மொத்த காவல் பணியாளர்கள் – 113602.
  • தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of
Police)
தலைமையில் இயங்குகின்றன.

  •  தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.

தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of
Police)
தலைமையில் இயங்குகின்றது.
  • தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).

தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of
Police)
தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector
General of Police)
மேற்பார்வை செய்கிறார்.
  • போலீஸ் துணை பிரிவுகள் – 247.
  • போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
  • திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
  • சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
  • தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City
Police Act 1888)
இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General –ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -