தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (தாலுகா, ஏஆர் & டிஎஸ்பி) பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து (இந்திய குடிமக்களுக்கு மட்டும்) ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்றுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் UGC / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா): 366, காவல் துணை ஆய்வாளர்கள் (AR): 145, காவல் துணை ஆய்வாளர்கள் (TSP): 110 என மொத்தம் 615 + 6(BL) காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாதம் ரூ. 36,900 – 1,16,600 வரை ஊதியம் அளிக்கப்படும். திறந்த மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் தற்காலிகமாக 26.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு TNUSRB வாரியம் திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.