இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு – 2023
அறிவிக்கை எண் – 02/2023 (TNUSRB New Notification 2023)
தேர்வு விவரம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023 க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கிறது. ஊதிய விகிதம்: ரூ. 18,200 – 67,100
அறிவிக்கை தேதி: 08.08.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.08.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2023
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,359
ஒதுக்கீடுகள்:
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10%. சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%. முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:
தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.07.2023-ன் படி):
குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் (வயது உச்சசவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)
குறிப்பு: கூடுதல் தகவல்கள் / விவரகங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பம் (Online Application) சமர்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in – ஐ பார்வையிடவும்.
Notification: Download Here