மாணவர்களின் ஐயத்தையும் அச்சத்தையும் நீக்குவதற்கு ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து பல இடங்களில் வெற்றிகரமான பயிற்சி முகாம்களை நடத்தியிருக்கிறது. அதே போன்று வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னை எழும்புரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ‘ UPSC,TNPSC குரூப் 1,2 தேர்வுகளில் வெல்வது எப்படி ?’ என்கிற இலவசப் பயிற்சி முகாமை நடத்தவிருக்கிறது.
இது மட்டுமின்றி ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் சிறப்புரை அளிப்பதற்காக சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் திரு. தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ், ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி Dr. எம்.ரவி, போட்டித் தேர்வு பயிற்றுநர் டாக்டர். சங்கர சரவணன், King Makers IAS அகாடமியின் இயக்குநர் திரு.சத்ய ஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமிற்கு அனுமதி இலவசம்.முன்பதிவு அவசியம் !