தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ‘நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், TNPSC, TNURSB, SSC, IBPS, UPSC உள்ளிட்ட அனைத்தும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஏற்கனவே, AIM TN என்றழைக்கப்படும் யூடியூப் சேனலில் பயிற்சி காணொலிகள் பதிவேற்றம் செய்து வருகிறது.
இதன் மூலமாக அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சிக் காணொலிகளைக் காண்பதோடு அதற்கான பாடக் குறிப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் சிறப்பம்சமே மாதிரித் தேர்வுகள் தான். ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும்.