தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விஏஓ தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக, ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகள் அனைத்து நாள்களிலும் காலை நேரத்தில் நடைபெறும். இப்போட்டித் தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாதிரித் தேர்வுகளும் நடைபெறும்.
ஆா்வமுள்ளோா் கல்விச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாள்களில் நேரடியாக தொடா்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். கூடுதல் விவரங்களை 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow