தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டின் படி அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை வரிசையாக அறிவித்து, அதற்கான பணியிடங்களை நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், TNPSC Tamil மற்றும் English Reporter பணிகளுக்கு மொத்தம் 9 காலியிடங்கள் இருப்பதாக 13.09.2022 என்று அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. கணினி அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு 12.10.2022 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேலும், 21.12.2022 ம் தேதி அன்று காலை மற்றும் பிற்பகல் என்று இரண்டு பிரிவுகளாக தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், TNPSC Reporter பணிக்கான தேர்வின் அட்மிட் கார்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை OTR Dashboard மூலமாக அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Press Release: Download Link