2023 அக்டோபர் மாதம் Civil Judge, Combined Geology Subordinate Services Exam, Junior Scientific Officer மற்றும் Post of Road Inspector Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.
5,446 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் – 2 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 1 மெய்ன்ஸ் தேர்வுகளுக்கான முடிவுகளும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற 14 வகையான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை TNPSC வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய தேர்வர்கள் எப்போதும் எங்கள் வலைப்பதிவை பின்தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC புதிய தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு