தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அதன் அலுவலகத்தில் கடந்த 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-॥, 2013-2018 பதவிக்கான நேர்முகத் தேர்வானது, முதலில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேது குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற 19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் உத்தரவின் படி, 19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற இருந்த இந்த நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான மறு தேதிகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.