சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி 2, 2ஏ-க்கான முதல்நிலை தேர்வை கடந்த 14ல் நடத்தியது.
அடுத்தக்கட்ட தேர்வான தொகுதி 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 9ம் தேதி, காலை, 10:00 மணிக்கு தொடங்க உள்ளது.
சிறந்த வல்லுனர்களை கொண்டு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. அத்துடன், மாதிரி தேர்வுகளும் இலவசமாக நடத்தப்படுகிறது. இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி, விருப்பம் உடைய தேர்வர்கள், முதல்நிலை தேர்வின் நுழைவுச்சீட்டு மற்றும் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், பயிற்சி மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், இதுபற்றிய விபரங்களை 0427 – 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.