TNPSC குரூப் – 4 தேர்வுக்காக பயிற்சி
TNPSC குரூப்
– 4 தேர்வுக்காக இலவச பயிற்சி
வகுப்பில் சேர விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி,
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் – 4 தேர்வு நடக்க
உள்ளது.இதில் பங்கேற்க
உள்ளவர்களுக்கு, தமிழக
அரசின் போட்டித் தேர்வுகள்
பயிற்சி மையம் சார்பில்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள, சர்
தியாகராயா கல்லுாரி; நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர்
கலைக்கல்லுாரி ஆகியவற்றில், பகல் 2.00 மணி முதல்
மாலை 5.00 மணி வரை,
மூன்று மாதம் இலவச
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி
பெற விரும்புவோர், குறைந்தது
10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
பயிற்சி மையங்களில், உணவு
மற்றும் தங்கும் வசதிகள்
இல்லை.தியாகராய கல்லுாரியில் 500 பேர்; நந்தனம் அரசினர்
ஆடவர் கலைக் கல்லுாரியில், 300 பேர் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவர்.
பயிற்சி
பெற விரும்புவோர், www.civilservicecoaching.com என்ற
இணையதளத்தில், மே
11 வரை விண்ணப்பிக்கலாம். மே
முதல் வாரத்தில் பயிற்சி
வகுப்புகள் துவக்கப்படும்.