TNPSC குரூப் – 4 தேர்வுக்காக பயிற்சி – திருப்பூர்
அரசு
பணியாளர் தேர்வாணையத்தின், குரூப்
-4 தேர்வு எழுதுபவருக்கான இலவச
பயிற்சி, மே 9ம்
தேதி துவங்குகிறது.தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 7,301 பணியிடங்களை நிரப்ப,
குரூப் -4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையுடன்(28-04-2022), தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்
நிறைவு பெறுகிறது; ஜூலை
24ம் தேதி தேர்வு
நடக்க உள்ளது.இந்நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி முகாம்,
மே 9ம் தேதி
துவங்குகிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நேரில்
வந்தோ, 0421 2999152 என்ற எண்கள்
வாயிலாகவோ, முன்பதிவு செய்து
கொள்ளலாம்.பயிற்சியின் இடையே,
மாதிரி தேர்வுகளும் நடத்தி
பயிற்சி அளிக்கப்படும்.