TNPSC
குரூப்
தேர்வுகள்
தேதி
அறிவிப்பு
தமிழகத்தில் பெரும்பாலான அரசு வேலைவாய்ப்புக்கள் டிஎன்பிஎஸ்சி மூலம்
தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்
மூலம் பணி நியமனம்
செய்யப்படுவது வழக்கம்.
ஆனால்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா
காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை தற்போது தமிழகத்தில் கொரோனா
பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள
காலிப்பணியிடங்களை நிரப்ப
போட்டித் தேர்வுகளை நடத்த
திட்டமிட்டுள்ளது.
தமிழக
அரசு தேர்வாணையம் கல்வித்தகுதி அடிப்படையில் குரூப்-1,
குரூப்-2, குரூப்-3, குரூப்-4
உட்பட பல்வேறு தேர்வுகளை
நடத்தி வருகிறது.
அந்த
வகையில் குரூப்-2, 2ஏ
தேர்வு குறித்த அறிவிப்பு
விரைவில் வெளியாகலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது
குரூப் 1 தேர்வு குறித்து
டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலசந்திரன் செய்திக்குறிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில்
தமிழகத்தில் அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களுக்கான துறை
தேர்வுகள் முதன் முறையாக
ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 7 மற்றும்
பிப்ரவரி 8ம் தேதி
சில துறைத் தேர்வுகள்
நடத்தப்பட உள்ளன.
இந்த
விடைத்தாள்கள் அனைத்தும்
கணினி மூலம் ஸ்கேன்
செய்யப்பட்டு நேர்மையான
முறையில் திருத்தம் செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
2022ல்
மட்டும் 32 வகையான தேர்வுகள்
நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மே மாதம்
குரூப் 1 தேர்வு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில்
தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதக் காத்திருக்கும் இளைஞர் பட்டாளம் இதனால்
உற்சாகத்தில் உள்ளனர்.