தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் tnpsc குரூப் 4 தேர்வுகள் நேற்று ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் மொத்தம் 22 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் நேற்று 18 லட்சம் பேர்கள் தேர்வை எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக பெண்கள் 12,67,457 பேர், ஆண்கள் 9,35,354 பேர், மூன்றாம் பாலினத்தவர் 131 பேர், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 பேர் ஆதவற்ற பெண்கள், 6,635 முன்னாள் படைவீரர்கள் என மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த எழுத்து தேர்வில் நேற்று 18 லட்சம் பேர் கலந்து கொண்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் காலியிடங்களான 7331 பதவிகளுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்தால் ஒரு பதவிக்கு 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரை நடைபெற்றது.
குரூப் -4 தேர்வு முடிவு எப்போது?
குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளிவரும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுகள் நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது..