சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு மையத்தில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இவலச பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்தவகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ‘குரூப் – 4’ தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.இதற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கு சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ., காது கேளாதோர் மேல்நிலை பள்ளியில், வரும் 28ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது.
இதற்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி வகுப்பு, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.பயிற்சியில் சேர விரும்பும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், சிறப்பு வேலைவாய்ப்பு மையம் அல்லது, சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளியில் அணுகலாம். மேலும், விபரங்களுக்கு, 94999 66023, 044 -2250 0835 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.