1. பொருளறிந்து பொருத்துக : (2019 G4)
(a) தடக்கர் – கரடி
(b) எண்கு – காட்சி
(c) வள்உகிர் – பெரிய யானை
(d) தெரிசனம் – கூர்மையான நகம்
a. 3 1 4 2
b. 1 4 3 2
c. 1 2 3 4
d. 1 3 2 4
Answer: a. 3 1 4 2
2. சொல்லுக்கேற்ற பொருளறிக : (2019 G4)
a. வலிமை – திண்மை
b. நாண் – தன்னைக்குறிப்பது
c. கான் – பார்
d. துணி – துன்பம்
Answer: a. வலிமை – திண்மை
3. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் (2019 G4) றுண்டாகச் செய்வான் வினை
– இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?
a. படை கவசம்
b. படை கருவிகள்
c. கைப்பொருள்
d. வலிமையான ஆயுதம்
Answer: c. கைப்பொருள்
4. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க. (2018 G4)
a. மாணிக்கம்
b. மரகதம்
c. இரத்தினம்
d. பவளம்
Answer: d. பவளம்
5. “வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன? (2018 G4)
a. பனையோலைப் பெட்டி
b. வயல்
c. வட்ட வடிவு
d. எல்லை
Answer: a. பனையோலைப் பெட்டி
6. சொல்லைப் பொருளோடு பொருத்துக: (2018 G4)
. (a) வனப்பு 1.காடு
. (b) அடவி 2.பக்கம்
. (c) மருங்கு 3.இனிமை
. (d) மதுரம் 4.அழகு
a. 2 1 4 3
b. 3 2 1 4
c. 4 1 2 3
d. 1 2 3 4
Answer: c. 4 1 2 3
7. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க. (2018 G4)
a. பவளம்
b. முத்து
c. மாணிக்கம்
d. மரக்தம்
Answer: c. மாணிக்கம்
8. கடிகை என்பதன் பொருள் யாது? (2016 G4)
a. அணிகலன்
b. கடித்தல்
c. கடுகு
d. காரம்
Answer: a. அணிகலன்
9. செறு என்பதன் பொருள் (2016 G4)
a. செருக்கு
b. சேறு
c. சோறு
d. வயல்
Answer: d. வயல்
10. பொருத்துக: (2016 G4)
சிந்தை – நீர்
நவ்வி – மேகம்
முகில் – எண்ணம்
புனல் – மான்
a. 2 1 3 4
b. 1 3 4 2
c. 3 4 2 1
d. 4 3 1 2
Answer: c. 3 4 2 1
11. வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது————–யைக் குறிக்கும். (2016 G4)
a. சிங்கம்
b. கடல்
c. மாலை
d. சந்தனம்
Answer: b. கடல்
12. மடங்கல்- என்னும் சொல்லின் பொருள் (2016 G4)
a. மடக்குதல்
b. புலி
c. மடங்குதல்
d. சிங்கம்
Answer: d. சிங்கம்
13. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் (2016 G4)
a. பொன்மனம்
b. ஆர்த்து
c. உற்றார்
d. சார்பு
Answer: c. உற்றார்
14. அங்காப்பு என்பதன் பொருள் (2016 G4)
a. சலிப்படைதல்
b. வாயைத் திறத்தல்
c. அலட்டிக் கொள்ளுதல்
d. வளைகாப்பு
Answer: b. வாயைத் திறத்தல்
15. யாப்பு என்றால்—- என்பது பொருள் (2014 G4)
a. அடித்தல்
b. சிதைத்தல்
c. கட்டுதல்
d. துவைத்தல்
Answer: c. கட்டுதல்
16. கண்ணகி- எனும் சொல்லின் பொருள் (2014 G4)
a. கடும் சொற்களைப் பேசுபவள்
b. கண் தானம் செய்தவள்
c. கண்களால் நகுபவள்
d. கண் தானம் பெற்றவள்
Answer: c. கண்களால் நகுபவள்
17. சதகம் என்பது——–பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் (2014 G4)
a. ஐம்பது
b. நூறு
c. ஆயிரம்
d. பத்தாயிரம்
Answer: b. நூறு
18. வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் (2014 G4)
a. நிலம்
b. மலை
c. காடு
d. நாடு
Answer: b. மலை
19. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை – இதில் மகடூஉ என்பது——- (2014 G4)
a. மகள்
b. மகன்
c. பெண்
d. ஆண்
Answer: c. பெண்
20. பொருத்துக – சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G4)
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3.யானை
(d) களிறு 4. நெருப்பு
a. 2 1 4 3
b. 3 2 1 4
c. 1 3 4 2
d. 4 3 2 1
Answer: a. 2 1 4 3
21. பொருள் தேர்க.
அங்காப்பு – என்பது (2014 G4)
a. வாயைப் பிளத்தல்
b. அங்கம் காப்பு
c. அகம் காத்தல்
d. வாயைத் திறத்தல்
Answer: d. வாயைத் திறத்தல்
22. பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க. (2013 G4)
(a) புள் 1.விரைவு
(b) குலவு 2.கலப்பை
(c) மேழி 3.அன்னம்
(d) ஒல்லை 4.விளங்கும்
a. 2 4 1 3
b. 4 1 2 3
c. 3 1 4 2
d. 3 4 2 1
Answer: d. 3 4 2 1
23. சரியான பொருள் தருக (2013 G4)
இந்து
a. நிலவு
b. துன்பம்
c. படகு
d. தலைவன்
Answer: a. நிலவு
24. பொருத்துக : (2013 VAO)
சொல் – பொருள்
(a) களபம் – 1. அம்பு
(b) புயம் – 2. பெயர்
(c) நாமம் – 3. சந்தனம்
(d) பகழி – 4. தோள்
(A) 1 2 3 4
(B) 2 3 4 1
(C) 3 4 2 1
(D) 4 2 1 3
Answer: (C) 3 4 2 1
25. ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்க. (2013 VAO)
(A) பாந்தள்
(B) முழை
(C) உரகம்
(D) பன்னகம்
Answer: (B) முழை
26. பொருத்துக : (2013 VAO)
சொல் – பொருள்
(a) கேசரி – 1. துன்பம்
(b) பூதரம் – 2. குடை
(c) கவிகை – 3. மலை
(d) இடர் – 4. சிங்கம்
(A) 4 2 3 1
(B) 1 3 2 4
(C) 4 3 2 1
(D) 2 1 4 3
Answer: (C) 4 3 2 1
27. ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள் (2013 VAO)
(A) தூய்மையானவர்
(B) வஞ்சகர்
(C) மென்மையானவர்
(D) கடுமையானவர்
Answer: (B) வஞ்சகர்
28. கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக : (2013 VAO)
(A) பௌவம்
(B) புணை
(C) புணரி
(D) பரவை
Answer: (B) புணை
29. பொருந்தா இணையைக் கண்டறிக : (2013 VAO)
(A) நூல் – வரை
(B) தாள் – வணங்கு
(C) களை – பறி
(D) நார் – கிழி
Answer: (A) நூல் – வரை
30. சொல் – பொருள் (2014 VAO)
(a) கலாபம் – 1. கிளி
(b) விவேகன் – 2. பொய்கை
(c) வாவி – 3. ஞானி
(d) அஞ்சுகம் – 4. தோகை
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 4 2 1 3
(D) 3 4 2 1
Answer: (A) 4 3 2 1
31. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக :(2014 VAO)
(a) அம்பி – 1. குஞ்சி
(b) அல் – 2. பறை
(c) துடி – 3. இருள்
(d) தலைமூடி – 4. படகு
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 2 3 4 1
(D) 3 4 1 2
Answer: (A) 4 3 2 1
32. பொருந்தாததைச் சுட்டுக. (2014 VAO)
(A) வாதம்
(B) ஏமம்
(C) பித்தம்
(D) சீதம்
Answer: (B) ஏமம்
33. ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள் (2016 VAO)
(A) சுடுகாடு
(B) வண்டி
(C) மண்டி
(D) இடுகாடு
Answer: (B) வண்டி
34. ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள் (2016 VAO)
(A) மான்
(B) நாய்
(C) நரி
(D) செந்நாய்
Answer: (A) மான்
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
Thank uSir