டிஎன்பிஎஸ்சி நடத்தவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ போட்டித் தோ்வுகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது என ஆட்சியா் ச.அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்கள், இலவச வை’ஃ’பை வசதி மற்றும் போட்டித் தோ்வு புத்தகங்கள், மாதாந்திர இதழ்கள், செய்தித்தாள்கள் கொண்ட நூலக வசதியுடன் உள்ளது.
இப்போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் தங்களது புகைப்படம், விண்ணப்பம் செய்ததற்கான நகல் மற்றும்ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தினை நேரில் தொடா்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளபதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044–27426020, 9486870577, 6383460933 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியரக வளாகம் தரைத்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.