திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் தொடங்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் தோ்வா்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப்-2, குரூப்-2ஏ தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு 14.9.2024 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 8-ஆம்தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் நேரடியாகவும், 04175–233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.