TNPSC சார்நிலை பணி: மதிப்பெண்கள் மற்றும்
தரவரிசை
வெளியீடு
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு
பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப்
1, குரூப் 2, குரூப் 3, குரூப்
4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட
தேர்வுகளைடி என்பிஎஸ்சி நடத்தி
வருகிறது. கடந்த ஆண்டு
கொரோனா பெருந்தொற்று காரணமாக
அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம்
குறைந்து வரும் நிலையில்
TNPSC தேர்வாணையம் இந்த
வருடத்துக்கான தேர்வு
அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த பொறியியல்
சார்நிலை பணிகள் தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும்
தரவரிசையை TNPSC வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில்
பதவிக்கான தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது,
545 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வை
15,490 பேர் எழுதிய நிலையில்,
15,012 பேருக்கான மதிப்பெண் மற்றும்
தரவரிசைப் பட்டியலை TNPSC
வெளியிட்டுள்ளது. இதனை
TNPSC.ன் www.tnpsc.gov.in என்ற
இணையதளத்தில் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை
ஆகிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.