தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் 4 VAO தேர்வு குறித்து நடப்பு ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது. இந்த தேர்வின் புதிய பாடத்திட்டம் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Revised Syllabus: Download Here
TNPSC Group 4 Revised Syllabus: Download Here
Official Website: Click Here
தமிழகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இந்த வகையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது. மேலும் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டாக TNPSC குறித்து எந்த வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பலர் வேலைவாய்ப்புயின்றி அவதிப்பட்டனர். மேலும் கொரோனா குறைந்ததன் காரணமாக தற்போது 2021 ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.
மேலும் TNPSC தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ் மொழி தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது என்னவென்றால் பழைய படத்தித்தின் மூலம் தேர்வு நடை பெறுமா? அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அடிப்படையில் தான் தேர்வு நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. மேலும் குரூப் 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html) வெளியிடப்பட்டுள்ளது. எனவே TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் இணையதளத்திற்கு சென்று பாடத்திட்டகளை பார்த்து பயனடையலாம்.