HomeBlogTNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் - Interactive mode-ல் வெளியீடு
- Advertisment -

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் – Interactive mode-ல் வெளியீடு

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் - Interactive mode-ல் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு வகையாக தெரிவு முறைகளை (Selection procedure) பின்பற்றுகிறது.

குரூப் 1, குரூப் 2  உள்ளிட்ட பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

சிறைக் காவலர், கல்வித் துறையில் உள்ள நிதியாளர், கால்நடை உதவி மருத்துவர் ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தெரிவு முறை:  முதற்கட்டமாக,  குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் Interactive mode-ல் வெளியிடும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் - Interactive mode-ல் வெளியீடு

சில தினங்களுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும்.

2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும்,6366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் - Interactive mode-ல் வெளியீடு
இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:

இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான, விவரங்களை Interatcive Mode-ல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர்  மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.  தெரிவுப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிடும்.

கலந்தாய்வு:      

ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில்    விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள்  Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். `அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு நாள் கலந்தாய்வு முடிந்த பிறகும், துறை வாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -