அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் ஆள் மாறாட்டம் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் புதிய பணியாளர்களை நியமிக்கும் வகையில் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. மேலும் இந்த தேர்வுகளில் சில நேரங்களில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்து விடுகின்றன.
இந்தநிலையில் ஆள்மாறாட்டம் தடுக்கும் வகையில் போட்டித் தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வகையான கருத்துக்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வருகைப்பதிவு பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வது துவங்கப்பட்டுள்ளது.எனவே March.க்கு பின் நடக்கும் தேர்வுகளில் ஆதார அடிப்படையான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வரும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.