TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயி லாக பல்வேறு போட்டித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த மையம் சார்பில் டிஎன்பிஎஸ்பி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9940107365 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங் களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் காணொலி வழி கற்றல் மின்னணு பாட குறிப்புகள், மின் புத்தகங்கள், போட்டித் தேர்வுக் கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தேர்வர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து எந்தத் தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து, அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இலவச மாக பதிவிறக்கம் செய்யலாம். இவ் வாறு ஆட்சியர் மகேஸ்வரி செய் திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.