டி.என்.பி.எஸ்.சி தமிழ் மொழி தேர்வின் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் மற்றும் பாடதிட்ட மாற்றம் தொடர்பாக சட்ட திருத்தம் செய்ய சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் தியாகராஜன் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்த மசோதா விபரம்:
பத்தாம் வகுப்பு பொது தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழை ஒரு மொழி பாடமாக படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடிப்படை தமிழ் மொழி திறனை சோதிக்க இரண்டாம் நிலை மொழி தோவை தமிழ்நாடு அரசு பனியாளர் தேர்வாணையம் நடத்துகிறது .
கடந்த 2016 பிப்.18ல் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசாணையில் இந்த மொழி தேர்வுக்கான எழுத்து தேர்வில் பாடதிட்ட மாதிரி மற்றும் பாடதிட்டம் திருத்தப்பட்டது. இந்த மொழி தேர்வில் குறைந்த பட்சம் 45 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2017ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் மொழி தேர்வின் பாட திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இந்த செயல்முறைக்காக தமிழ் நாடு சட்டம் – 2016ல் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.