இம்மாத இறுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎசி குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளது. மேலும், குரூப் III-ஏ (15 காலியிடங்கள்), குரூப் V-ஏ (161 காலியிடங்கள்), சிறை அலுவலர் (8 பணியிடங்கள்) போன்ற பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர் கீழே சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சில அடிப்படைத் திட்டமிடல்கள்:
1. ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பணியிடங்க்ளின் எண்ணிக்கை, பதவியின் தன்மை உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
TNPSC – Official Site Click Here
2. தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பாடத்திட்டங்களை (Syllabus) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். printout எடுத்து உங்கள் மேசை மேல் ஒட்டிவைத்துக் கொள்வது நல்லது.பாடத்திட்டத்தை தெளிவாக வாசித்து உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
TNPSC – Syllabus Download Here
3. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பற்றிய பார்வையை முந்தைய வினாத்தாள்கள் அளிக்கும். எந்த பாடப்பகுதிக்கு முக்கியம் கொடுக்கப்படுகிறது? ஏன் சில பகுதிகளுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை கண்டறியுங்கள்.
TNPSC PYQ Papers – Download Here
4. மிகச் சரியான நேர அட்டவணையை தயாரித்துக் கொள்வது முக்கியமானதாகும். நீங்கள் ஒரு வேலையை செய்து வந்தாலும், முழு நேரமாக தேர்வுக்கு மட்டும் தயார்படுத்தி வந்தாலும் நேர அட்டவணை உருவாக்குவது முக்கியமானதாகும். பணிக்கு செல்பவர்கள் வார/மாத அட்டவணையை தயார் செய்து கொள்ளலாம்.
5. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒழுங்கமைத்த பயிற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். தேர்வர்கள் அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, எந்த பாடப் பகுதி நமக்கு சுலபமானது?எது கடினமானது?எந்த பாடத்தை முயன்று படித்தால் சுயமாக புரிந்து கொள்ள முடியும்? எப்பாடத்திற்க்கு பிறரின் உதவு தேவைப்படுகிறது? உதவும் நிலையில் யார் உள்ளார்? போன்ற கேள்விகளை எழுப்பி கொள்ளுங்கள்.
TNPSC – Important Notes Download Here
6. கடினமான பாடப்பகுதிகளுக்கு எந்த மாதிரி உதவி தேவைப்படுகிறது என்பதை கண்டறியுங்கள். youtube , whatsapp, telegram போன்ற தொழிநுட்பங்களை கற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாட முயற்சி செய்யுங்கள்.
ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேர்வுகள்
7. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து உதவிகளை கேட்டுப் பெறுங்கள். தேர்வுக்கு தயார் செய்வதை கூச்சமின்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்துங்கள். குறிப்பாக, திருமணமான பெண் தேர்வர்கள், தேர்வு காலங்களில் சில உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வீட்டாரிடம் கோரிக்கை வையுங்கள்.
8. உங்கள் அருகில் ஏதேனும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இலவச வகுப்புகள் பற்றி தெரிந்து கொள்ள நமது குரூப்பில் இணைந்துகொள்ளுங்கள்
9. அனைத்து பாடப்பகுதிகளிலும் குறைந்தபட்ச நிபுணத்துவம் பெற முயற்சி செய்யுங்கள்.
10. தேர்வுக்குத் தயாராகும் போது சில ஏமாற்றமும், மனச் சோர்வும் ஏற்படும். இதையெல்லாம் தவிர்த்து விட்டு, முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.