TNPSC
குரூப்-1
தேர்வில் 6 கேள்விகள் தவறு
சென்னையில் தங்கி படித்தவர்கள் சொந்த
ஊர்களுக்கு சென்றுவிட்டதாலும், குறைவான
நபர்களே தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. TNPSC
குரூப்-1 முதல்நிலை தேர்வில்
தவறாக கேட்கப்பட்ட 6 வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க
வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
துணை
ஆட்சியர், காவல் உதவி
கண்காணிப்பாளர், வணிக
வரி உதவி ஆணையர்
உள்ளிட்ட 6 துறைகளில் காலியாக
இருக்கும் 66 பணியிடங்களுக்கான குரூப்
1, முதல் நிலை தேர்வு
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையில் 150 மையங்கள் உட்பட,
தமிழகம் முழுவதும் 856 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கொரோனா
தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு
நடத்தப்பட்டதால், தேர்வர்கள் காலை 9.15 மணிக்கு தேர்வு
மையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
Hand Written Current Affairs – நடப்பு நிகழ்வுகள் 2020 DECEMBER PDF
காலை
10 மணிக்கு தொடங்கிய தேர்வு
பிற்பகல் ஒரு மணிக்கு
நிறைவடைந்தது. முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக, விடைத்தாள்களில் கையொப்பமிட்டு இடது
கைப்பெருவிரல் ரேகையை
பதிக்க தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வழக்கமாக
வினாத்தாளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, விடையளிக்கும் வகையில் A B C D என
4 Option.கள் வழங்கப்பட்டிருக்கும். இந்த முறை
கூடுதலாக E என்ற ஆப்ஷனும்
வழங்கப்பட்டிருந்தது. அதாவது,
கேட்கப்பட்ட கேள்விக்கு 4 Option.களில் பதில்
தெரியாவிட்டால், தேர்வர்கள் E ஆப்ஷனை தேர்வு செய்ய
அறிவுறுத்தப்பட்டனர்.
தேர்வில்,
தந்தை பெரியாரை பற்றி
8 கேள்விகளும், திராவிட இயக்கம்,
பேரறிஞர் அண்ணாவை பற்றியும்
வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
வினாத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை
வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை
எண்ணி, அந்த எண்ணிக்கையை தேர்வர்கள் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டது, அதற்காக, தேர்வர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
எண்ணிக்கை
தவறாகும் பட்சத்தில், 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டதால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்தனர்.தேர்வு
எழுத இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணபித்திருந்த போதும்,
குறைந்த பணியிடங்கள் என்பதாலும், சென்னையில் தங்கி படித்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதாலும், குறைவான நபர்களே
தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
TNPSC GROUP 1 EXAM ANSWER KEY – SHANKAR IAS ACADEMY PDF
இதனிடையே
இந்த தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் மொழிப்பெயர்ப்பு உள்ளிட்ட
காரணங்களால் 6 வினாக்கள் தவறாக
இருந்ததாக தேர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே
தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் உரிய மதிப்பெண்கள் வழங்க
வேண்டும் என அவர்கள்
கோரிக்கை வைத்துள்ளனர்.
தவறாக கேட்கப்பட்ட கேள்வி எண்கள் : 32,33,59,64,90,163