தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) 2024 தேர்வு Time Table வெளியீடு!
இக்கால அட்டவணையில் GTE 2024 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நாள், விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள், விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் தேர்வு நடைபெறவுள்ள நாள் மற்றும் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் நாள் போன்றவை இடம்பெற்றுள்ளது. இதன் படி, பிப்ரவரி மாதம் (Session 1) நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிப்பானது 10.12.2023 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 12.12.2023 அன்று முதல் 11.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. பிறகு Shorthand High Speed / Shorthand Junior, Intermediate, Senior / Accountancy Junior and Senior / Typewriting Junior, Senior and High Speed ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் 10.02.2024 அன்று முதல் 26.02.2024 அன்று வரை நடத்தப்பட்டு முடிவுகள் 23.04.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
GTE 2024 தேர்வின் இரண்டாம் பிரிவான ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிப்பானது 09.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 11.076.2024 அன்று முதல் 11.07.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இதனை தொடர்ந்து Shorthand High Speed / Shorthand Junior, Intermediate, Senior / Accountancy Junior and Senior / Typewriting Junior, Senior and High Speed ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் 10.08.2024 அன்று முதல் 26.08.2024 அன்று வரை நடத்தப்பட்டு முடிவுகள் 22.10.2024 அன்று வெளியிடப்பட உள்ளதாகவும் இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு கால அட்டவணையை காணவும்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow